புன்னகை
வணக்கம்,
இன்றைக்கு உங்ககிட்ட புன்னகை பற்றி ஒரு சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எவ்வளவு அழகான வார்த்தை புன்னகை. ஒரு நாளைக்கு நீங்க எத்தனை முறை சிரிப்பீங்க. காலையில இருந்து வேலை சரியா இருக்குங்க, இதுல எங்க சிரிக்க நேரம்...இப்படி பலர், புன்னகை பலர் வாழ்க்கையில் இல்லாத ஒன்று. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை மறைத்து சிரித்த முகத்தோடு இருப்பாங்க சிலர்.
அவனுக்கு என்னப்பா கவலை எப்பவும் சிரிச்ச முகமா இருக்கான், நமக்கு அப்படியா ஆயிரம் கவலை இப்படியும் சிலர்.
சின்ன புன்னகை நம்ம மனச லேசாக்கும், எவ்வளவு வேலை இருந்தாலும் சில நொடிகள் ஒதுக்கலாம் நமக்காக . டீவியில காமெடிலாம் பார்க்கற பழக்கம் உண்டா, அதற்கும் நேரம் இல்லனா, வாட்ஸ் அப்ல இப்ப கொரானா ஜோக்ஸ் லாம் பார்த்தாவது சிரிப்பீங்களா...இதுக்கும் நேரம் இல்லாம clear chat கொடுக்கறவங்களும் இருக்காங்க. இப்படி சிரிக்க கூட நேரம் இல்லாம ஓடிட்டே இருக்கோம்.
குழந்தைங்க மாதிரி எந்த கவலையும் இல்லாம சிரிக்கணுங்க, நம்ம உடம்புல வர பல வியாதிக்கு இயற்கையான சிறந்த மருந்து சிரிப்பு. மகிழ்ச்சியா இருந்தா ஆரோக்கியமா இருக்கலாம்.
இன்று ஒரு தகவல் ஐயா தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் ஒரு மேடையில பேசிட்டு இருக்கும் போது சிரிப்பு பற்றி அழகா சொல்லுவாங்க..கணவன் மனைவிக்கிடையில் நகைச்சுவை உணர்வு இருந்தா இல்லறம் இனிமையா இருக்கும். ஒரு நாளைக்கு குழந்தைங்க 200 முறை சிரிப்பாங்களாம், அதே பெரியவங்க 15 முறை சிரிப்பாங்க, குழந்தையா இருக்கும் போது 200 முறை சிரிச்ச நாம வளர வளர கொஞ்சம் கொஞ்சமா அது குறைந்து 15 முறையா மாறிடுது. அவ்வளவு நெருக்கடி வாழ்க்கையில நமக்கு. சிரிப்புங்கிறது இயல்பான ஒரு விஷயம். ஒரு குழந்தைக்கு முன்னாடி கிலுகிலுப்பையை ஆட்டுங்க அழகா சிரிக்கும். ஜோக் சொன்னாதான் சிரிக்கனுங்கறது கிடையாது. ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க ஜோக் ஒரு சாவி மாதிரி சிரிப்புங்கிற பூட்டை திறக்க உதவுகிறது. எவ்வளவு அழகாக ஐயா அவர்கள் சொல்லியிருக்காங்க, அதனால எப்பவும் சந்தோஷமா இருங்க. அடுத்த பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
நன்றி
புஷ்பா பிரகாஷ்
Ha ha ha, super.
ReplyDeleteThank you😍
Delete🙂🙂🙂
ReplyDelete😍😍
DeleteThis comment has been removed by the author.
DeleteThank you😍
ReplyDelete