அலையாத்திக் காடுகள் {Mangrove forest}
இந்தியாவில் உள்ள அலையாத்திக் காடுகள்
- கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக்காடே உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடாகும்.
- தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள காடு உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகள் ஆகும்.
- கோடிக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மிகப் பெரிய அலையாத்தி காடுகளில் ஒன்றாகும்.
சுனாமிக்கு அஞ்சாத அலையாத்திக் காடுகள்
- அலையாத்தித் தாவரங்கள் {அ} கண்டல் தாவரங்கள் {Mangrove} எனப்படுபவை, கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும்.
- இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்து அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு {Mangrove forest} எனப்படும்.
- அலையாத்தித் தாவரங்களின் வேர்கள் நீருக்கு மேலாக அடர்ந்து தெரிவதுடன், கடற்கரை ஓரங்களில், கடலலையினால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- 2004 டிசம்பர் 26 ம் தேதி ஏற்பட்ட சுனாமியால் முத்துப்பேட்டைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்தது இந்த அலையாத்திக் காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- குளிர் காலங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளின் சரணாலயமாகவும் இந்த அலையாத்திக் காடுகள் உள்ளன.
- சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் இவ்வகையான அலையாத்தித் தாவரங்கள், தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

—-புஷ்பா பிரகாஷ்

Comments
Post a Comment