மாங்காய் ஊறுகாய்/ மாங்காய் தொக்கு
![]() |
| மாங்காய் ஊறுகாய்/ மாங்காய் தொக்கு |
தேவையான பொருட்கள்
மாங்காய் - 1கப் { துருவியது }
நல்லெண்ணெய்
-1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் -
1 தேக்கரண்டி
வறுத்து, அரைக்க
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1
தேக்கரண்டி
சிகப்பு மிளகாய்
- 5 {அ} காரத்திற்கு ஏற்ப
கல் உப்பு - தேவையான
அளவு
செய்முறை
முதலில்
மாங்காயை சுத்தம் செய்து மேல்
தோல் மற்றும் கொட்டையை நீக்கி
விட்டு, மாங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
வறுத்து அரைக்க
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வறுத்து ஆறிய பின் அரைத்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலில் நல்லெண்ணெய்
விட்டு சூடானவுடன் அதில் கடுகு, பெருங்காயம் சேர்த்து பொறிந்தவுடன் அரைத்து வைத்துள்ள
தூளையும், துருவிய மாங்காயை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.
10 நிமிடம் கழித்து
அடுப்பை அணைக்கவும்.
நன்றாக ஆறிய பின்
காற்று புகாத பாட்டிலில் மாங்காய் தொக்கு
/ மாங்காய் ஊறுகாயை எடுத்து வைக்கவும்.
இட்லி, தோசை, சப்பாத்தி
போன்றவற்றுடன் மாங்காய் தொக்கு / மாங்காய்
ஊறுகாயை பரிமாறவும்.


Comments
Post a Comment