மாங்காய் வற்றல் ஊறுகாய்

 மாங்காய் வற்றல் ஊறுகாய்

தேவையான பொருட்கள்
மாங்காய் வற்றல் - 1கப்
நல்லெண்ணெய் -1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
வறுத்து, அரைக்க
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 5 {அ} காரத்திற்கு ஏற்ப
கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி அதில் மாங்காய் வற்றலை போட்டு மூடி வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து வைத்து கொள்ளவும்.
வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வறுத்து ஆறிய பின் அரைத்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு சூடானவுடன் அதில் கடுகு, பெருங்காயம் சேர்த்து பொறிந்தவுடன் அரைத்து வைத்துள்ள தூளையும், மாங்காய் வற்றலையும் அதனுடன் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.
5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
நன்றாக ஆறிய பின் காற்று புகாத பாட்டிலில் மாங்காய் வற்றல் ஊறுகாயை எடுத்து வைக்கவும்.
கஞ்சி, பழைய சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் மாங்காய் வற்றல் ஊறுகாயை பரிமாறவும்.

-- புஷ்பா பிரகாஷ்


Comments

Popular posts from this blog

அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

பஞ்ச மந்திரம் / Pancha Mantra

Koozh Vathal / கூழ் வத்தல்