உருளைக்கிழங்கு சாதம்

உருளைக்கிழங்கு சாதம்
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 1
சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலைசிறிதளவு

செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் வைத்து சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து வெங்காயம், தக்காளி,சாம்பார் பொடி ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
பின் உப்பு, மஞ்சள்தூள் , உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
பின் வடித்த சாதத்தை இக்கலவையுடன் சேர்த்து கிளறவும்.
சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

--சரண்யா அஜித்

Comments

Post a Comment

Popular posts from this blog

அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

பஞ்ச மந்திரம் / Pancha Mantra

Koozh Vathal / கூழ் வத்தல்