பூக்களின் அரசி – ரோஜா

பூக்களின் அரசி – ரோஜா

ரோஜா கூட்டம்
பூக்களின் அரசி – ரோஜா
பூச்செடி வளர்ப்பதே ஒரு தனி கலை. ஒரு தொட்டியில் பூச்செடி வைத்து தண்ணீர் ஊற்றி அதை நல்ல முறையில் பராமரித்து அந்த செடியில் மொட்டு விட்டு அது மலரும் போது கிடைக்கும் சந்தோஷம் அளவிட முடியாதது. ஒரு ரோஜா தோட்டத்தை பார்த்தால் கிடைக்கும் சந்தோஷம் எண்ணிலடங்காதது. அவ்வளவு அழகை கொண்ட தோட்டம் தான் ஊட்டியில் உள்ள ரோஜா தோட்டம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ரோஜா தோட்டத்தைப் பற்றி சில வரிகள்.
 ஊட்டியில் உள்ள உயிரியில் பூங்காவின் நூற்றாண்டின் நினைவாக இந்த ரோஜா தோட்டத்தை உருவாக்கினர்.
உலகின் பல இடங்களில் இருந்து பல வகையான ரோஜா செடிகளை கொண்டு வந்து இங்கே வளர்க்கின்றனர்.
 இந்தியாவிலேயே மிக அதிகமான ரோஜா வகைகளை கொண்டது இந்த ரோஜா தோட்டம்.
பச்சை, மஞ்சள், கறுப்பு, சிகப்பு போன்ற பல வண்ணங்களிலும் இங்கு ரோஜா பூக்கள் உள்ளன.
2,200 வகைகள் மற்றும் 20,000 ரோஜா பூக்களையும் கொண்டது இந்த ரோஜா தோட்டம்.
எவ்வளவு வண்ணங்களில் ரோஜா பூக்கள், செடிகள் அப்பப்பா கண்ணை பறிக்கும் கொள்ளை அழகு. எந்த பக்கம் திரும்பினாலும் ரோஜா, ரோஜா, ரோஜா என பாடலை முணுமுணுக்கும் உதடுகள். இவ்வளவு அருமையான தோட்டத்தை உருவாக்க உழைத்தவர்களை தொழிலாளர்கள் என்று சொல்வதை விட படைப்பாளிகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
---புஷ்பா பிரகாஷ்


Comments

  1. Sundariajith4@gmail.com12 July 2018 at 00:14

    வண்ண ரோஜா மலர்களில் படங்களில் கொள்ளை போகுதே .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

பஞ்ச மந்திரம் / Pancha Mantra

Koozh Vathal / கூழ் வத்தல்