வெண்டைக்காய் சாதம்
![]() |
| வெண்டைக்காய் சாதம் |
தேவையானப் பொருட்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 1
வெண்டைக்காய்
- 10
வடித்த சாதம்
- 1 கப்
சாம்பார் பொடி
- 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான
அளவு
தாளிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு
- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை -
சிறிதளவு
பெருங்காயம் –
சிறிதளவு
செய்முறை
முதலில் வெண்டைக்காய்,
வெங்காயம், தக்காளியை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய்
விட்டு சூடு செய்து வெண்டைக்காயை தனியாக வதக்கி வைத்து கொள்ளவும்.
பின் வேறொரு வாணலில்
எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து நறுக்கிய
வெங்காயம், தக்காளியை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதக்கிய
பின் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
பின் வெண்டைக்காய்
சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.
பின் அந்த கலவையுடன்
வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும்.
சூடான சுவையான
வெண்டைக்காய் சாதம் தயார்.
சுவையான வெண்டைக்காய்
சாதத்தை மதிய நேர உணவாக கொடுக்கலாம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
-- சரண்யா
அஜித்



Simple but superb dish.
ReplyDelete