Ragi Puttu/ராகி புட்டு/கேழ்வரகு புட்டு
Ingredients
- Ragi flour/kezhvaragu flour- 1cup
- Jaggery-1/2cup
- Cashew-Few broken pieces
- Salt- to taste
- Water-2 tablespoons or more or less
- Cardamom powder-a generous pinch
- Grated coconut-1/4cup
Method
In a kadai add the ragi flour and fry for few minutes until the raw smell goes off.
Then in a wide mixing bowl add the ragi flour and add pinch salt.
Then sprinkle some water at a time and mix well with hands to form crumbly mixture.
When the puttu flour is taken in hand and hold it should form a shape and when we leave it should be crumbly. This is right consistency for any puttu.
Meanwhile boil water in a idly pot.Add the flour to idlyplates and cook it for 7 to 10mins.
While the puttu is cooking, in a kadai fry the cashews and keep aside.
Then add the jaggery and little water to it.Boil it until jaggery gets dissolved.
Add cardamom powder to it.
Now add the puttu flour to the jaggery and mix well.
Switch off the flame.
Add the fried cashews and grated coconut and serve.
Note
Instead of jaggery you can also add sugar. After cooking puttu add directly the sugar to it.
You can also omit the coconut.
This puttu can also be made in puttmaker along with banana in kerala style.
-SaranyaAjith
தேவையான பொருட்கள் :
ராகி மாவு/கேழ்வரகு மாவு – 1 கப்
வெல்லம் – 1/2 கப்
முந்திரி – 4 {உடைத்தது}
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 மேஜை கரண்டி {அ} தேவையான அளவு
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
துருவிய தேங்காய் – 1/4 கப்
செய்முறை :
- ஒரு வாணலில் ராகி மாவை பச்சை வாசனை போகும்வரை வறுக்கவும்.
- அகலமான பாத்திரத்தில் ராகி மாவும் ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கவும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவை கையால் கலக்கவும் {அ} பிசையவும்.
- மாவை கையில் எடுத்தால், பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிரும் பதம் புட்டு மாவின் சரியான பதமாகும்.
- பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அது கொதி வந்தவுடன், இட்லி தட்டில் மாவை வைத்து 5 லிருந்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- புட்டு மாவு வெந்தவுடன், வாணலில் முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.
- பின் அதே வாணலில் வெல்லம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விடவும். வெல்லம் கரைந்து தண்ணீர் கொதி வந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
- பின் புட்டு மாவை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுப்பை அணைக்கவும்.
- வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் சேர்த்து ராகி புட்டை பரிமாறவும்.
குறிப்பு:
- வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையும் சேர்க்கலாம். புட்டு மாவு வெந்தவுடன் சர்க்கரையை அதனுடன் சேர்க்கவும்.
- தேங்காயை தவிர்த்தும் புட்டு செய்யலாம்.
- இந்த புட்டை புட்டு குழலிலும் செய்யலாம். கேரளாவில் இந்த புட்டில் வாழைப்பழம் சேர்த்து செய்வார்கள்.

Comments
Post a Comment