அலையாத்திக் காடுகள் {Mangrove forest}
இந்தியாவில் உள்ள அலையாத்திக் காடுகள் கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக்காடே உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடாகும். தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள காடு உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகள் ஆகும். கோடிக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மிகப் பெரிய அலையாத்தி காடுகளில் ஒன்றாகும். சுனாமிக்கு அஞ்சாத அலையாத்திக் காடுகள் அலையாத்தித் தாவரங்கள் {அ} கண்டல் தாவரங்கள் {Mangrove} எனப்படுபவை, கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்து அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு {Mangrove forest} எனப்படும். அலையாத்தித் தாவரங்களின் வேர்கள் நீருக்கு மேலாக அடர்ந்து தெரிவதுடன், கடற்கரை ஓரங்களில், கடலலையினால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 2004 டிசம்பர் 26 ம் தேதி ஏற்பட்ட சுனாமியால் முத்துப்பேட்டைக்கு எந்த வித பாதிப்பும் ...

Comments
Post a Comment