சிகப்பு பரங்கிகாய் (அ) சிகப்பு பூசணிக்காய் சட்னி





தேவையானப் பொருட்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - சிறிதளவு
பரங்கிக்காய் - 1 கப் (சதுரமாக அரிந்தது)
சிகப்பு மிளகாய் - 2 (அ) காரத்திற்கு ஏற்ப
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், சிகப்பு மிளகாய்  உளுத்தம் பருப்பை போட்டு சிறிது வறுக்கவும். பின் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பரங்கிகாய் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஆறிய பின் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.
சுவையான பரங்கிக்காய் (அ) சிகப்பு பூசணிக்காய் சட்னி தயார்.
இட்லி, தோசை, சூடான சாதத்துடன் பரங்கிக்காய் சட்னியை பரிமாற சுவையாக இருக்கும்.
---புஷ்பா பிரகாஷ்



Comments

Post a Comment

Popular posts from this blog

அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

பஞ்ச மந்திரம் / Pancha Mantra

Koozh Vathal / கூழ் வத்தல்