Spring onion chutney/வெங்காயத்தாள் சட்னி
Ingredients
Chopped spring onion – 1 cup
Tomato – 1
Garlic – 4 flakes
Ginger – a small piece
Red chilli – 1
Salt – as needed
For seasoning
Oil – 1 tsp
Mustard seeds – 1 tsp
Cumin seeds – 1 tsp
Split black gram / urad dal- 1 tsp
Asafetida – a pinch
Curry leaves – few
Method
Heat oil in a kadai and add the seasoning and fry well and keep aside.
Then add the chopped spring onion and fry until raw smell goes.
Then add garlic,ginger and red chilli and fry.
Then add tomato and fry until it becomes mushy.
Allow it to cool and grind it as chutney along with salt.
Then add the seasoning and mix well.Tasty and healthy spring onion chutney is ready.
Serve it with rava idly or rava dosa or chapathi.
–Pushpa Prakash
தேவையான பொருட்கள் :
வெங்காயத்தாள் {நறுக்கியது} – 1 கப்
தக்காளி – 1
பூண்டு – 4 பற்கள்
இஞ்சி – சிறியது
சிகப்பு மிளகாய் – 1
உப்பு – தேவையானவை அளவு

தாளிக்க:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
- ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து தனியாக வைக்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின் இஞ்சி, பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
- அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- ஆறிய பின் உப்பு சேர்த்து அரைத்து அதில் தாளிப்பை சேர்த்து கலக்கவும்.
- சுவையும், சத்தும் நிறைந்த வெங்காயத்தாள் சட்னியை ரவா தோசை {அ} ரவா இட்லி {அ} சப்பாத்தியுடன் பரிமாறவும்.
–புஷ்பா பிரகாஷ்


Comments
Post a Comment