Cauliflower Rice|காலிஃப்ளவர் சாதம்
Ingredients
Cooked rice – 1 cup
Cauliflower – 1/2 cup (cleaned)
Capsicum – 1
Onion – 1
Garlic -4 flakes
Tomato – 1
Sambar powder – 1 tsp
Salt – as needed
Ghee – 1 tsp
For seasoning
Oil -1tbsp
Mustard seeds – 1 tsp
Cumin seeds/jeea – 1tsp
Urad dal- 1 tsp
Asafetida/hing-a generous pinch
Curry leaves -few
Method
Chop the vegetables finely.
Heat oil in a kadai and add the ingredients given under For seasoning and keep aside.
Then add the onion in the same kadai and fry it.
Then add the capsicum and cauliflower fry until the raw smell goes off .
Then add the tomato and fry until it becomes mushy .
Add the sambar powder ,salt and fry it. Add some water and cook it for 5 to 10 minutes till the veggies gets cooked.
After the veggies gets cooked and water absorbed completely switch it off.
Then in the cooked rice add the ghee,veggies and seasoning and mix well.
Tasty cauliflower rice is ready to serve.
Note
Instead of sambar powder you can add green chillies.
Before cookingcauliflower,put it in water mixed with turmeric powder and salt for cleaning it.
– -Pushpa Prakash
தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் – 1 கப்
காலிஃப்ளவர் – 1/2 கப் {சுத்தம் செய்தது}
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
பூண்டு – 4 பற்கள்
தக்காளி – 1
சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
செய்முறை :
- காய்கறிகளை பொடியாக அரிந்து கொள்ளவும்.
- வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளித்து தனியாக வைக்கவும்.
- அதே வாணலில் முதலில் வெங்காயத்தை வதக்கவும்.
- பின் காலிஃப்ளவர், குடைமிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
- சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மூடி 5 லிருந்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- காய் நன்கு வெந்து தண்ணீர் குறைந்த உடன் அடுப்பை அணைக்கவும்.
- வடித்த சாதத்தில் நெய் விட்டு காய் கலவையையும் தாளிப்பையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- சுவையான காலிஃப்ளவர் சாதம் தயார்.
குறிப்பு:
- சாம்பார் பொடிக்கு பதிலாக பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம்.
- காலிஃப்ளவர் சமைக்கும் முன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து சுத்தம் செய்யவும்.
–புஷ்பா பிரகாஷ்

Comments
Post a Comment