Kurma(side dish for chapathi)/குருமா

Ingredients
Onion – 1 big
Tomato -1
Potato – 2 to 3 medium sized
Salt – as needed
For grinding
Coconut (grated)-2tbsp
Roasted gram – 1tbsp
Cashews -4
Green chillies-2 to 3
Fennel seeds – 1/2 tsp
Ginger – a small piece
Garlic – 4
Cardamom -1
For seasoning
Oil – 2 tsp
Cinnamon – a small piece
Cloves -2
Method
Chop the onion and tomato finely and cube the potatoes.
Heat  oil in a kadai add the cinnamon and cloves.
Then add the onion and fry until the color changes and add potatoes and fry well.
Add the tomatoes and fry till it becomes mushy.
Then add salt and water and close with lid and cook until potatoes cooks well.
Meanwhile grind the ingredients given under To grind as a paste.
After the potatoes cooked well add the ground paste to it.
Boil it till raw smell goes off.
Serve hot with chapathi or idly or dosa.
Note
You can add masala powder.
For Spicer you can also add chilli powder.
Instead of grinding ginger and garlic, you can use ginger garlic paste before frying onions.
-SaranyaAjith
தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 1 {பெரியது}
தக்காளி – 1
உருளைக்கிழங்கு – 2 {அ} 3
உப்பு – தேவையான அளவு

அரைக்க:
துருவிய தேங்காய் – 2 மேஜைக்கரண்டி
பொட்டுக்கடலை – 1 மேஜைக்கரண்டி
முந்திரி – 4
பச்சை மிளகாய் – 2 {அ} 3
சோம்பு – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – சின்ன துண்டு
பூண்டு – 4 பற்கள்
ஏலக்காய் – 1

தாளிக்க:
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பட்டை – சின்னது
லவங்கம் – 2


செய்முறை :
  • வெங்காயம்,தக்காளி, மற்றும் உருளைக்கிழங்கை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து பட்டை, லவங்கம் இரண்டையும் சேர்க்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • பின் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
  • பின் அதில் உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
  • அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • காய் நன்கு வெந்த பின் அரைத்த விழுதை அதனுடன் சேர்க்கவும்.
  • பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  • சூடாக குருமாவை சப்பாத்தி {அ} இட்லி {அ} தோசையுடன் பரிமாறவும்.

குறிப்பு:
  • தேவையெனில் மசாலா பவுடரும் சேர்க்கலாம்.
  • காரத்திற்கு மிளகாய் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருளில் இஞ்சி, பூண்டு சேர்க்காமல், வெங்காயம் வதக்கும் முன்பாக இஞ்சி, பூண்டு பேஸ்டை சேர்த்தும் வதக்கலாம்.

–சரண்யா அஜித்

Comments